சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிட போவதாக என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனையும், அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனையும் டிராபிக் ராமசாமி சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திராவிட கட்சிகளை எதிர்ப்பதற்கு பாஜக, தேமுதிக மற்றும் தமாகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிடப்போவதாகவும், அதிமுக அரசை அகற்ற வேண்டும் என நினைப்பவர்கள் தன்னை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றும் ராமசாமி வேண்டுகோள் விடுத்தார்.


No comments:
Post a Comment