குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் ஏசியா, மார்ச் 7 முதல் 13 வரை புக் செய்யப்படும் பயணக்கட்டணங்கள் ரூபாய் 1,099 முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த குறைந்த கட்டணங்களுக்கான விமான பயண காலகட்டமாக அக்டோபர் 1, 2016 முதல் மே 22, 2017 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த ஏர் ஏசியா நிறுவனத்தின் அறிவிப்பில் உள்நாட்டில், விசாகப்பட்டிணம், கவுகாத்தி, கொச்சி, இம்பால், கோவா மற்றும் டெல்லி நகரங்களுக்கு தொடக்க விலையான 1,099ல் பயணிக்கலாம் எனவும், பாங்காக்கிற்கு சென்னை மற்றும் பெங்களூரிலிருந்து ரூபாய் 3,999 விலையில் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணத்தில் விமான நிலைய வரி, இதர விருப்ப சேவை கட்டணங்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment