சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 14 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மலேசியாவில் இருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் திங்கள்கிழமை நள்ளிரவு திருச்சி விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறையினர் சோதனை செய்தபோது, சென்னையைச் சேர்ந்த சையதுஅலி என்ற பயணி, சுமார் 140 கிராம் தங்கத்தை எலக்ட்ரானிக் சாதனத்துக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 4.65 லட்சம்.
இதேபோல, திங்கள்கிழமை அதிகாலை சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானப் பயணிகளின் உடைமைகளை சோதித்தபோது, இளையான்குடியைச் சேர்ந்த ஷேக் ராவுத்தர் என்ற பயணி 320 கிராம் தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கக் கட்டிகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 9.45 லட்சமாகும்.


No comments:
Post a Comment