அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடப்பதை மறுக்கவில்லை என்று பா.ஜ.க. மூத்த தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இல. கணேசன் கூறுகையில், திமுக, காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி அல்லாத அனைத்து கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இந்த சில கட்சிகள் தவிர அனைத்து கட்சிகளுக்கும் கூட்டணிக்கான கதவுகளை நாங்கள் திறந்தே வைத்துள்ளோம் என்றார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள், அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்கிறீர்களே... அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த இல. கணேசன், அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடப்பதை மறுக்கவில்லை.. பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment