மதுரை அருகே அரசு பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானவர்களுக்கு முதல்வர் ஜெயலிலதா ஆழ்ந்த இரங்கலையும், நிவாரண உதவியும் அறிவித்துள்ளார். மதுரையில் டி. கல்லுப்பட்டி அருகே சுப்புலாப்புரம் என்ற இடத்தில் அரசுப் பேருந்தும் சிமெண்ட் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே நடந்த விபத்து குறித்த செய்தி கேட்டு தாம் மிகவும் வருந்தியதாகவும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவும் பிரார்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment