உலக அளவில் வாட்ஸ் அப் அப்ளிகேஷனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியை எட்டிவிட்டதாக அந்த சேவையை வழங்கிவரும் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக், ட்விட்டர் சமூக வலைத்தளங்களுக்கு நிகராக, செல்போன் வாடிக்கையாளர்களிடம் ‘வாட்ஸ் அப்' பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. எஸ்எம்எஸ், போட்டோ, வீடியோக்கள் போன்றவற்றை கண் இமைக்கும் நேரத்தில் நண்பர்களுக்கு அனுப்ப உதவும் தகவல் தொழில்நுட்பப் புரட்சி சாதகமாக கருதப்படுகிறது வாட்ஸ் அப்.
வாட்ஸ்அப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உலகளாவிய அளவில் நூறு கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் சுமார் பத்து கோடி புதிய பயனாளர்கள் இணைந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 7 பேரில் ஒருவர் தங்களது மொபைல் அல்லது கம்யூட்டரில் வாட்ஸ் அப் அப்ளிகேஷனை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு வாட்ஸ்அப்பை பேஸ்புக் குழுமம் ரூ.1.3 லட்சம் கோடிக்கு விலைக்கு வாங்கியது. தற்போது 53 மொழிகளில் இதை பயன்படுத்தி வருவதால் தொழிலதிபர்கள், மாணவர்கள், வணிகர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். சுமார் நூறு கோடி குழுக்கள் (குரூப்) வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றன. நாள் ஒன்றுக்கு 42 பில்லியன் எஸ்எம்எஸ்களும், 1.6 பில்லியன் போட்டோக்ககளும், 250 மில்லியன் வீடியோக்களும் வாட்ஸ்அப் மூலமாக பரிமாறப்பட்டு வருவதாக இந்த வாட்ஸ்அப் 'அப்'பை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான ஜன் கவோம் குறிப்பிட்டுள்ளா குறிப்பாக, இந்தியாவில் மட்டும் வாட்ஸ்அப் மூலம் மட்டும் ஏராளமான புகைப்படங்கள் அனுப்பப்படுகின்றன. அதிகமான வாட்ஸ் அப் குழுக்களும் இங்கேதான் இருக்கின்றன எனவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment