Latest News

TIYA வின் பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்த்தெடுப்பு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹும்


அன்பிற்கினிய சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். நூல்: புஹாரி 7138.



நேற்று வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு TIYA வின் தலைவர் N. முகமது மாலிக் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் முஹல்லா வாசிகள் முன்னிலையில் கூட்டம் தொடங்கப்பட்டது. முன்னதாக நிஜார் அஹமது கிராத் ஓதினார் அதனை தொடர்ந்து 2014 முதல் 2015 வரையிலான TIYA வின் செயல்பாடு, கணக்கு விபரங்கள் அனைத்தும் முஹல்லா வாசிகள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டது.


மூத்த உறுப்பினர்களான சகோ.M.பகுருதீன் அவர்களையும் சகோ. S.K. முகமது சுல்தான் அவர்களையும் தேர்வு குழு உறுப்பினராக தேர்வு செய்து, TIYA வின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.அதன்படி அவர்கள் இருவரும் கீழ்க்காணும் சகோதரர்களை உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று ஒருமனதாக தேர்வு செய்தார்கள் அதன் விபரம் வருமாறு.


நிர்வாகக்குழு உறுப்பினர்கள் :

1. தலைவர்                   M. ஹாஜா முகைதீன் (SP )
2. உதவித் தலைவர்           D. சகாபுதீன்
3. செயலாளர்                 F. சேக் நஸ்ருதீன் (SM )
4. துணைச் செயலாளர்        B. முகைதீன் அப்துல் காதர்
5. பொருளாளர்               S. நவாஸ்

செயற்குழு உறுப்பினர்கள் :
1. K.M..N. முகமது மாலிக்
2. S.M. அப்துல் காதர்
3. S.K. முகமது சுல்தான்
4. N.M..S. சேக் பரீது
5.  K.M.S. நஜ்முதீன்
6. M. சமீர்
7. M. அப்துல் மஜிது
8. S. ஹாஜி முகமது
மேற்கண்ட நிகழ்வுடன் TIYA வின் பொதுக்குழு கூட்டம் உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று ஒரு மனதாக இனிதே நிறைவு பெற்றது.
என்றும் அன்புடன்
 தலைவர் மற்றும் நிர்வாகிகள்

TIYA














No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.