திருச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் அலுவலகத்தை, அக்கட்சியின் இளைஞரணியினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுகவில் முக்கியத் தலைவர்களாக விளங்குபவர்கள் கே.என்.நேருவும், திருச்சி சிவாவும். திமுக் ஆட்சியின் போது அமைச்சராக பதவி வகித்தவர் நேரு. தற்போது திமுக எம்.பி.யாக பதவி வகித்து வருபவர் சிவா.
ஒரே கட்சியில் இருந்த போதும், இருவருக்கும் இடையே மோதல், நீரு பூத்த நெருப்பாகவே உள்ளது. சிவாவை நேரு தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. நேரு தீவிர முக.ஸ்டாலின் ஆதரவாளர் என்பது அவருக்கு சாதகமாக உள்ளது. இந்நிலையில், இன்று திருச்சியில் நேருவின் அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுக இளைஞரணியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


No comments:
Post a Comment