ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக தலித் மாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலை, கள்ளக்குறிச்சி சித்த மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவிகள் தற்கொலை என்று அடுத்தடுத்து அதிர்ச்சி செய்திகள் நாட்டை உலுக்கி வரும் நிலையில், ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த என்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நோவா என்ஜினியரிங் கல்லூரியில் மின் மற்றும் மின்னணு பொறியியலில் 4-ம் ஆண்டு படித்து வரும் மாணவரான புவ்வாலா பிரேம் பிரசாத்(22) கடந்த சனிக்கிழமை இரவு கல்லூரி விடுதியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், அவர் இறப்புக்கு முன்பாக தற்கொலைக்கடிதம் எதையும் எழுதவில்லை. பிரேமின் மரணம் குறித்து அவரது சகோதரர் பவன் பிரசாத், “கல்லூரி அல்லது விடுதியில் என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளோம். கடினமாக உழைக்கும், வாழ்க்கையில் பெரிதாக எதாவது சாதிக்கும் எண்ணமும் கொண்ட பையன் அவன்” என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு இரண்டு நாள் முன்பாகக் கூட பிரேம் தனது சகோதரருடன் மகிழ்ச்சியாக இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment