இலங்கையில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டது. யாழ்ப்பாணம், புத்தூர், உள்ளிட்ட பல இடங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. பல இடங்களில் நில வெடிப்புகள் ஏற்பட்டதை காண முடிந்தது. இந்த நில அதிர்வு நன்கு உணரக் கூடியதாக இருந்ததாக நில அதிர்வு ஏற்பட்ட பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நில அதிர்வு மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை, பண்டாரவளை, அட்டாம்பிட்டிய, நுவரெலியா, பொத்துவில், கல்முனை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்த சேத விவரங்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை நில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2 முதல் 5 விநாடிகளில் உணரப்பட்ட இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை எந்தவிதத் தகவலும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment