இந்தியாவில் விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக, 2015 டிசம்பர் downloadமாதத்துடன் முடிவடைந்தகாலகட்டத்தின் அடிப்படையில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 19.71 சதவீதம் உயர்ந்துள்ளதாக இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டி.ஜி.சி.ஏ தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் இந்தியாவின் ஒவ்வொரு விமானத்திலும் கிட்டதட்ட 75 சதவீத இருக்கைகள் முழுவதுமாக புக்கிங் ஆகியிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விமான போக்குவரத்தில் 35.9 சதவீத பயணிகளை தொடர்ந்து தக்கவைத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் முதலிடத்தில் உள்ளது. ஜெட் குழுமம் 21.2 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனினும், ஒவ்வொரு விமானத்திலும் சீட்டுகள் புக்கிங் செய்யப்படும் கணக்குகளின்படி பார்த்தால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. கோ ஏர், ஏர் இந்தியா நிறுவனங்களும் முன்னிலையில் உள்ளன.


No comments:
Post a Comment