Latest News

இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை ஒரு லிட்டர் பாட்டில் குடிதண்ணீரை விட குறைவு- ஆனால் பெட்ரோல், டீசல் விலை?


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் நிலைத்தன்மை ஆகிய காரணங்களால் இந்தியாவில் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு லிட்டர் பாட்டில் குடிதண்ணீரை விட குறைந்துள்ளது. கடந்த வாரம் இந்திய அரசு அறிவித்த விலையின் படி 159 லிட்டர் கொண்ட ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 29.24 அமெரிக்க டாலர். இது இந்திய மதிப்பில் 1956 ரூபாய். எனவே ஒரு லிட்டர் கச்சா எண்ணெயின் விலை ரூபாய் 12 ஆகும். 

ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் குடி தண்ணீரின் விலை 15 என்று வைத்துக்கொண்டாலும், தற்போதைய இந்திய கச்சா எண்ணெய்யின் விலை ஒரு லிட்டர் பாட்டில் குடிதண்ணீரை விட 20 சதவீதம் குறைவு. 2014-ம் ஆண்டை ஒப்பிடும் போது தற்போதைய கச்சா எண்ணெய் விலை 70 சதவீதம் சரிந்துள்ளது. ஆனால் மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கான வரிகளை தொடர்ந்து உயர்த்தி வருவதால், கச்சா எண்ணெய் விலை குறைவின் பலனை மக்கள் பெறமுடியவில்லை. 2015-2016 நிதி ஆண்டில் மட்டும் பெட்ரோலின் அடிப்படை கலால் வரி ரூ.7.73 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டீசலின் அடிப்படை கலால் வரி ரூ. 7.83 உயர்த்தப்பட்டுள்ளது. 

மத்திய அரசு மட்டும் பெட்ரோல், டீசலுக்கான வரியை உயர்த்தாமல் இருந்திருந்தால் பெட்ரோலின் விலை ரூ. 10.02, டீசலின் விலை ரூ.9.97 குறைந்திருக்கும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.