Latest News

துருக்கியில் பயங்கர குண்டுவெடிப்பு: 10 பேர் உடல் சிதறி பலி; பலர் படுகாயம் !


துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் நேற்று நிகழ்ந்த பயங்கர குண்டு வெடித்ததில் 10 பேர் உடல் சிதறி பலியாயினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இஸ்தான்புல் நகரின், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தரும் சுல்தானாக்மெட் பகுதியில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 10 பேர் உடல் சிதறி பலியாயினர். 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலில் பலியானோர் ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் ஏராளமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப்படையினர் அங்கு விரைந்தனர் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் ஏராளமான உடல்கள் ரத்தவெள்ளத்தில் சிதறிக்கிடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது ஒரு தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் என்றும் வெடிகுண்டு நிறப்பட்ட கார் வெடிக்கச் செய்யப்பட்டது என்றும் மாறுப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்யும் பெண் ஒருவர் கூறுகையில், ''மிகவும் பலத்த வெடிச்சத்தம் கேட்ட போது. நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். வெளியே ஓடியவந்து பார்த்த போது பல சடலங்கள் சிதறி கிடந்ததை பார்த்தோம்" என்றார். இதனிடையே இஸ்தான்புல் ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இது எவ்வகையான வெடிவிபத்து என்பது குறித்து புலானய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், யார் இச்செயலில் ஈடுபட்டனர் என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கூறப்பட்டுள்ளது. இதனிடையே குண்டு வெடித்த இடத்தை போலீஸார் சுற்றி வளைத்துள்ளனர்.காயமடைந்த பலர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவ்பிரவாத இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஸ் தீவிரவாத அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.