வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறாது என்பது உறுதியாகிவிட்ட நிலையில் முதுபெரும் இடதுசாரித் தலைவர் நல்லகண்ணுவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க அந்த அணியினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆளும் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக வைகோ தலைமையில் மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில் இடதுசாரிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெற்றுள்ளன. இக்கூட்டணியில் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகளுக்கு வலைவிரிக்கப்பட்டது.
மறைமுக குட்டு இதனால் வைகோ அணியில் விஜயகாந்த் இடம்பெறமாட்டார் என்பது உறுதியானது. இதனால் பத்திரிகையாளர்களிடம் விஜயகாந்த் அநாகரிகமாக நடந்து கொண்டபோதும் அவரை மறைமுகமாக வைகோ விமர்சித்திருந்தார்.
முதல்வர் வேட்பாளராக நல்லகண்ணு ? இப்படி விஜயகாந்த் கூட்டணிக்கு வரப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்ட நிலையில் முதுபெரும் இடதுசாரித் தலைவர் நல்லகண்ணுவை தங்களது கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதற்காக நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விருதுநகரில் இடிமுழக்கம் அதுவும் விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 90-வது ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த முழக்கம் பலமாகவே எதிரொலித்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நல்லகண்ணுவை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் 10 சதவிகிதம் ஓட்டு அதிகமாகக் கிடைக்கும் என்கிறார்...அப்படியானால் ஏன் அவரையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என முழங்கியிருக்கிறார்... இதற்கு கூட்டத்தில் செம ரெஸ்பான்ஸாம் ஆக விஜயகாந்த் வரப்போவது இல்லை என்பது உறுதி... மாற்றாக நல்லகண்ணு தலையை மீண்டும் தேர்தல் களத்தில் உருட்டுகிறார்கள்....
No comments:
Post a Comment