பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது செருப்பு வீசிய நபர் போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் நிதீஷ் குமாரை நோக்கி ஒருவர் காலணியை (ஷூ) வீசினார். அவரை போலீஸார் கைது செய்தனர்.
பாட்னா மாவட்டம், பக்தியார்பூரில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் நிதீஷ் குமார் பங்கேற்றார். இது அவரது சொந்த ஊர் என்பதால் அங்கு பெரும் திரளாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியினரும், பொதுமக்களும் திரண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர் திடீரென நிதீஷ் குமாரை நோக்கி ஷூவை வீசினார். அதிர்ஷ்டவசமாக ஷூ அவர் மீது விழாமல் மேடைக்கு முன்பாக விழுந்தது. இதையடுத்து, அங்கிருந்த போலீஸார் அந்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். ஷூ வீச்சை பொருட்படுத்தாமல் நிதீஷ் நிகழ்ச்சியில் முழுமையாகப் பங்கேற்றார். ஷூ வீசிய நபரை போலீஸார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவரது பெயர் பி.கே.ராய் என்பதும், சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. முதல்வரிடம், தான் அளித்த புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அவர் மீது ஷூ வீசியதாக அந்த நபர் போலீஸாரிடம் தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment