ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய துரித நடவடிக்கை எடுக்குமாறு தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நெய்வேலியில் இன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
இரங்கல் தீர்மானம்-1:
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டத் தலைவர் திரு. கி. குணச்சந்திரன் 29.1.2016 அன்று சாலை விபத்தில் அகால மரணமடைந்தார். அன்னாரின் மறைவுக்கு இந்த செயற்குழு அஞ்சலி செலுத்துகிறது. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2:
கடலூர் மாவட்டம், திம்மராவுத்தன்குப்பத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்தவரும் நிறுவனத் தலைவரது உறவினருமான புலியூரைச் சேர்ந்த சக்திவேல் தனது தம்பியின் திருமண அழைப்பிதழ் கொடுக்க அவரது உறவினர் வீட்டுக்கு 24.1.2016 அன்று சென்றார்.கடலூர் மாவட்டம், திம்மராவுத்தன்குப்பத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்தவரும் நிறுவனத் தலைவரது உறவினருமான புலியூரைச் சேர்ந்த சக்திவேல் தனது தம்பியின் திருமண அழைப்பிதழ் கொடுக்க அவரது உறவினர் வீட்டுக்கு 24.1.2016 அன்று சென்றார். அப்போது பா.ம.க.வைச் சேர்ந்த சமூக விரோதிகள் அவரைத் தடுத்து கொலை வெறித்தாக்குதல் நடத்தி அவரது இருசக்கர வாகனத்தை உருத்தெரியாமல் அடித்து நொறுக்கிவிட்டனர். மேற்படி சம்பவத்தை சக்திவேல் கைபேசி மூலம் தகவல் அறிந்து அன்று காலை சுமார் 10.30 மணிக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தனது பொலிரோ ஜீப்பில் அவரது தம்பி மணிகண்டன் உடன் சம்பவ இடத்திற்க்கு சென்றார். அப்போது ஏற்கனவே சக்திவேலைத் தாக்கிய பா.ம.க. வன்முறைக் கும்பல் கொலை வெறித்தாக்குதலை பாலமுருகன், மணிகண்டன் ஆகியோர் மீதும் நடத்தி, பொலிரோ ஜீப்பை உடைத்து நொறுக்கிவிட்டனர். அடிபட்ட மூவரும் உடைந்த வண்டியை எடுத்துக் கொண்டு குள்ளஞ்சாவடி காவல்நிலையத்தில் முதலில் புகார் மனு அளித்தனர். ஆனால் காவல்நிலைய அதிகாரிகள் அதன் பின்னர் பா.ம.க.வினரிடம் புகார் மனு பெற்றுக் கொண்டு மேற்படி மூவர் (பாலமுருகன், மணிகண்டன், சக்திவேல்) மீதும் கொலை முயற்சி வழக்கு(இ.த.ச. 307) பதிவு செய்துவிட்டு பாலமுருகன் அளித்த புகார் மனுவை நிராகரித்துவிட்டனர்.
இந்த நிலையில் அன்று மாலை சுமார் 7 மணியளவில் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவரும் சாதி மோதல்களை உருவாக்கி சமூகத்தில் பல்வேறு விரோதங்களைப் பெற்றுள்ள நபர் கீழக்கொல்லை அருகில் அவருடைய பழைய விரோதிகளால் தாக்கப்படுகிறார். இந்த சம்பவத்துக்கு சிறிதும் தொடர்பில்லாத நிறுவனத் தலைவர் இளம்புயல் தி. வேல்முருகன் அவர்களையும் அவருடைய சகோதரர்கள் தி. திருமால்வளவன், தி. கண்ணன் ஆகியோரையும் திட்டமிட்டு போடப்பட்ட பொய்வழக்கில் சேர்த்ததுடன் காலையில் குள்ளஞ்சாவடி காவல்நிலையத்தில் இ.த.ச. 307 பிரிவின் கீழ் வழக்கு போடப்பட்ட பாலமுருகன், மணிகண்டன் ஆகிய இருவரையும் சேர்த்து முத்தாண்டிக் குப்பம் காவல்நிலையத்தில் பொய் புகார் கொடுத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகளை பழிவாங்கும் செயலில் பா.ம.க.வினர் ஈடுபட்டுள்ளனர் என்பதை மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு இச்செயற்குழு சுட்டிக்காட்டுகிறது. மேலும் நிறுவன தலைவர் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் மீது முத்தாண்டிகுப்பம் காவல் நிலையத்தில் போடபட்ட பொய் வழக்கை (கொலை முயற்சி வழக்கு) ரத்து செய்யும்படி தமிழக அரசை இச்செயற்குழு வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3:
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடங்கிய நாள் முதல் கடந்த நான்காண்டுகளில் தர்மபுரி, கம்பைநல்லூர், காடுவெட்டி, ஆகிய பொதுக்கூட்ட நிகழ்வுகலிலும், அரக்கோணம், சோளிங்கர் ஆர்.கே. பேட்டை ஆகிய இடங்களில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.கவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட போதும் கொலைவெறித் தாகுதல் நடத்தியவர்கள் மீது புகார் கொடுத்தும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப்போக்கை கடைபிடித்தமையை இந்த செயற்குழு மீண்டும் தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறது.
தீர்மானம் 4:
நிறுவனத் தலைவர் இளம்புயல் தி. வேல்முருகன் அவர்கள் எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் சூழ்நிலையில் சமூக விரோதிகளின் அச்சுறுத்தல்களும் கொலை மிரட்டல்களும் தொடர்வதால் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்திட வேண்டுமாய் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 5:
2016 சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிறுத்தி கட்சியின் அனைத்து நிலை பொறூப்பாளர்களும் தேர்தலில் வெற்றி பெறும் வண்ணம் தேர்தல் பணிகளை உடனடியாகத் தொடங்கிட வேண்டுமாய் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 6:
வருகிற பிப்ரவரி மாத 25ந்தேதிகுள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பொதுசெயலாளர், பொருளாளர், அமைப்பு செயலாளர்கள் தலைமை நிலைய செயலாளர் மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்துகொள்ளும்படி ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை நடத்தி பிப்ரவரி மாத இறுதியில் சென்னையில் மாநில பொதுக்குழுவை கூட்டி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய முடிவுகள் எடுப்பது எனவும் இச்செயற்குழு தீர்மானிக்கிறது
சிறப்பு தீர்மானம் 7:
2016 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் தேர்தல் தொடர்பான கூட்டணி பற்றிய முடிவுகளை எடுப்பதற்கு நிறுவனத் தலைவருக்கு இச்செயற்குழு முழு அதிகாரத்தை ஒரு மனதாக வழங்குகிறது.
வேண்டுகோள் தீர்மானம் 8 :
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன்,முருகன்,பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய துரித நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை இச்செயற்குழு வேண்டி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment