இந்தோனேசியாவின் மொலுக்கா தீவில் வடக்கு-வடகிழக்காக சக்தி வாய்ந்த நில நடுக்கம் மையம் கொண்டுள்ளதாக சற்று முன் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மைய தகவல் படி 102 கி.மீ ஆழத்திற்கு மையம் கொண்டுள்ள இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் இந்தோனேஷியாவின் தாலத் தீவிலும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிர் சேத விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை இந்தோனேசியா நிலநடுக்க அபாயமிக்க பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது


No comments:
Post a Comment