தலைநகர் டெல்லியில் ஒரு 'தம்' தர மறுத்த அண்ணனை உடன் பிறந்த தம்பி அடித்து கொன்ற சோக சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புகை உயிருக்கு பகை என்று எத்தனையே முறை எச்சரிக்கை விடுத்தாலும். ஸ்டைலாக சிகரெட் பிடித்து புகையை விடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை பார்த்து சிகரெட் குடிக்க ஆரம்பித்தவர்களும் உண்டு. அதுவே சோக கதையாகிய சம்பவங்களும் நடந்தது உண்டு. அந்த வகையில் டெல்லியில் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டெல்லி மங்கல்புரி பி பிளாக் பகுதியில் நேற்று இரவு டியூசன் முடித்து வந்த இளைஞர் (16) ஒருவர் அங்கு தனது அண்ணன் சிகரெட் குடித்துக் கொண்டிருப்பதைக் பார்த்துள்ளான். பின்னர் இவனுக்கும் தம் அடிக்கும் ஆசை வந்துள்ளது. இதையடுத்து அவன் அண்ணனிடம் சென்று ஒரு தம் தருமாறு கேட்டுள்ளான். தம்பியின் மீது உள்ள பாசமோ என்னமோ, தம்பிக்கு 'தம்' தருவதற்கு அண்ணன் மறுத்துவிட்டான். இதையடுத்து இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த தம்பி அங்கிருந்த நீண்ட கம்பி கொண்ட பொரிக்கும் சட்டியை எடுத்து அண்ணனின் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு வெளியே சென்றுவிட்டார். வலியால் அண்ணன் துடித்துள்ளான். சிறிது நேரத்துக்குப் பிறகு வீட்டுக்கு வந்த அச்சகோதரர்களின் பெற்றோர், மூத்த மகன் ரத்த வெள்ளத்தில் மிதப்பதை கண்டு போலீசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்த செல்லப்பட்ட அவர், ஏற்கெனவே இறந்தவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதனிடையே அண்ணனிடம் மன்னிப்பு கேட்பதற்காக வீட்டுக்கு வந்த தம்பி, அண்ணன் சடலமாக கிடப்பதை கண்டு கண்ணீர் விட்டார். நடந்த சம்பவத்தை போலீஸாரிடம் விவரித்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், சிறார் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தினர். அவரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்புவதற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment