வியன்னா: பாரீஸ் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய இருவரை சந்தேகத்தின் பேரில் ஆஸ்திரிய போலீசார் கைது செய்துள்ளனர். ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில், பாரீஸ் தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரியில் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் பிரான்ஸ் நாட்டவர்கள் கிடையாது என்றும் அவர்கள் அல்ஜிரியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் ஆஸ்திரியா விசாரணை தரப்பு தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுடைய பெயரும் வெளியிடப்படவில்லை. இருவரும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்துள்ளனர் என்று அரசு வழக்கறிஞர் கூறிஉள்ளார்.
இவர்களுக்கு நவம்பர்-13 பாரீஸ் தாக்குதலுடன் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது. இதுதொடர்பான தகவல்கள் வெளியாகியதும் பிரான்ஸ் நாட்டு போலீஸ் அதிகாரிகள், ஆஸ்திரியா செல்ல ஆயத்தம் ஆகினர். அவர்கள் இருவர்களிடம் விசாரிக்க சால்ஸ்பர்க் நகருக்கு வந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக வெளியான முதல்கட்ட தகவலில் இருவரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் சிரியாவின் போலி பாஸ்போர்ட்டை வைத்து இருந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அவர்கள் அல்ஜிரியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இவர்களும் பாரீஸில் தாக்குதல் நடத்தியவர்களுடன், அகதிகளாக ஐரோப்பிய யூனியனுக்குள் நுழைந்தனர் என்றும் பின்னர் அவர்கள் பிரிந்துவிட்டனர் என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது. பிரான்ஸ் தாக்குதலை அடுத்து ஐரோப்பிய யூனியனில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது எனவே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த மாதம் 13 ஆம் தேதி இரவு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதலை நடத்தியிருந்தனர். இத்தாக்குதலில் மொத்தம் 130 அப்பாவி பொதுமக்கள் பலியாகி இருந்தன. தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment