தமிழக அரசியலில் "....த்தூ" தலைவர் என பெயர் பெற்றுவிட்ட விஜயகாந்துக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்திருப்பது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னையில் நேற்று செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்த விஜயகாந்த், நிதானமே இல்லாத நிலையில் திடீரென பத்திரிகையாளர்களைப் பார்த்து, ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்பீங்களா? ....த்தூ.......என கொஞ்சமும் நாகரிமின்றி காறி உமிழ்ந்தார்.
அவரது இந்த செயல் பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழக சட்டசபையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கும் ஒருநபர், நாலாந்தர மனிதரைக் காட்டிலும் நிதானமின்றி சாலையில் சாயக் கிடக்கும் ஒருமனிதரைப் போல வாயில் வந்ததையெல்லாம் துப்பித் தொலைவதை எப்படித்தான் சகிப்பது என்பது அவர்களின் கேள்வி. இப்படிப்பட்ட விஜயகாந்த்தின் செயலை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆதரித்து இன்று பேட்டி கொடுத்துள்ளது அக்கட்சி தொண்டர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஜெயலலிதாவிடம் இதுபற்றி கேட்டீர்களா? என நானும் கேட்டிருக்கிறேன். விஜயகாந்தும் கேட்டிருக்கிறார்... ஆனால் இதுவரை நீங்கள் ஜெயலலிதாவிடம் பேட்டி எடுத்தீர்களா? கேள்வி கேட்டீர்களா? என்பதை பற்றி சொல்லவில்லை. ஆகையால் செய்தியாளர்கள்தான் விஜயகாந்தின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என 'அதிபுத்திசாலித்தனமாக' பதில் அளித்துள்ளார். எப்படியாவது விஜயகாந்த் கூட்டணிக்கு வந்துவிட வேண்டும் என்பதற்காக எந்த நிலையைத் தாண்டியும் செல்வோம் என மு.க.ஸ்டாலின் நிலைப்பாடு எடுக்கிறார்...ஆனால் முதுபெரும் பத்திரிகையாளரான தி.மு.க. தலைவர் கருணாநிதி இதை ஏற்கிறாரா?
No comments:
Post a Comment