ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கும் மேல் வருவாய் இருப்போருக்கு எரிவாயு மானியம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்தது முதல் அதிக வருவாய் உள்ளோர் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு விளம்பரங்களை செய்து வருகிறது. இதுவரை மொத்தம் 57.5 லட்சம் பேர் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.
உயர் வருவாய் பிரிவினருக்கு சந்தை விலையில் எரிவாயு சிலிண்டர் வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனிடையே ரூ10 லட்சத்துக்கும் மேல் வருவாய் இருப்போருக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலிய துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் கூறும்போது, நாட்டில் மொத்தம் இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சமையல் கேஸ் மானியத்தை தாங்களாகவே விட்டுக் கொடுத்துள்ளனர். மார்ச் மாத இறுதிக்குள் இந்த எண்ணிக்கை மேலும் நிறைவான அளவுக்கு உயரும் என்று நம்புகிறேன் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment