மத்திய பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கு மீண்டும் மரண அடி விழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் கட்சியாக உள்ளது. அண்மையில் பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்த நிலையில் ம.பி.யில் தலா 1 லோக்சபா, சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் ரட்லம் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இது பா.ஜ.க.வுக்கு பின்னடைவாக கருதப்பட்டது. இதனிடையே கடந்த 22-ந் தேதி 8 உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதிலும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. 8 உள்ளாட்சி இடங்களில் 5 இடங்களை காங்கிரஸ் வென்றுள்ளது. ஆளும் பா.ஜ.க. 3 இடங்களைத்தான் வெல்ல முடிந்தது. இது பா.ஜ.க.வுக்கு கடும் பின்னடைவாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment