உலக அளவில் மற்ற நாடுகளை விட இந்திய பெண்களே கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பால் அதிகளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வானது மும்பையைச் சேர்ந்த மகப்பேறியல் மருத்துவரான அமீத் என்பவரால் நடத்தப்பட்டது. ஐந்து நகரங்களில் சுமார் 2400 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
இந்தியப் பெண்களில் சுமார் 32 சதவீதம் பேர் கருச்சிதைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. உலக அளவில் 10 சதவீதம் பெண்கள் உரிய மருத்துவ வசதிகள் இல்லாமல் கருச்சிதைவு அல்லது தொடர்ச்சியாக கருக்கலைப்பு மேற்கொள்வதாக இந்த ஆய்வு கூறுகின்றது. தனது ஆய்வு முடிவுகள் குறித்து மருத்துவர் அமீத் கூறுகையில், "தொடர்ச்சியான கருச்சிதைவால் இந்தியாவில் 7.46 சதவீதம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக மரபணு, வரலாற்று ரீதியான காச நோய் போன்றவை ஆகும். இதன் மூலம் பெண்களின் கருப்பைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment