இஸ்லாமிய அறிஞரும், தமிழகத்தில் எண்பதுகளில் ஏற்பட்ட இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவருமான இக்பால் மதனி மணப்பாறையில் மரணம் அடைந்தார் !
அன்னாரது ஜனாசா நாளை அஸர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஹியூன்
அன்னாரின் பாவங்களை மன்னித்து, அவரின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சிறப்பாக்கி வைக்கட்டும்!
நன்றி : அதிரைபிறை
ஷேக் இக்பால் மதனிக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் . ஷேக் அவர்களின் சொந்த ஊர் திருச்சி மணப்பாறை. தமிழகத்திலிருந்து முதன் முதலில் மதீனா பல்கலை களகத்தில் படித்து பட்டம் பெற்றவர். ஷேக் நாஸிருந்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ் , ஷேக் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் போன்ற மிகப் பெரும் உலமாக்களிடம் நேரடியாக மார்க்கத்தை பயின்றவர் , தமிழகத்தில் தவ்ஹீதின் எழுச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவர் என்பது பலரும் அறியாத விஷயம், குர் ஆனை மொழி பெயர்த்து கிங் ஃபஹத் அச்சகத்தின் மூலம் வெளியிட்டு இன்று உலகில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம் முஸ்லிம் அல்லாத மக்களிடத்தில் கொண்டு சென்றவர், முக்தஸர் ஸஹீஹ் முஸ்லிம், சுன்னுத்திர்மிதி, அபூதாவூத் ....இன்னும் அதிகமான மார்க்க புத்தகங்களை தமிழுலகிற்க்கு தந்தவர், நீண்டகாலம் துபை அவ்காஃபின் கீழ் பணியாற்றியதோடு பல சிறந்த மாணவர்களை உருவாக்கியவர்,அல்லாஹ்வின் கிருபையினால் தமிழகத்தில் பல தவ்ஹீத் மர்கஸ்களை உருவாக்கியவர், தங்களுடைய சொந்த ஊரில் தற்போது ஒரு அனாதை நிலையத்தையும் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஷேக் அவர்கள் மார்க்கத்திற்க்கு ஆற்றிய சேவைகள் மகத்தானது.
No comments:
Post a Comment