செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பின்றி திறந்துவிட்டு பெரும் சேதம் ஏற்பட்டதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார். சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளத்துக்கு காரணமே செம்பரம்பாக்கம் ஏரியில் முன்னறிவிப்பின்றி பல்லாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது என்பது பொதுவாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு.
இது தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும்; போர்க்குற்றங்களுக்கு இருப்பதைப் போல கட்டளை பொறுப்பு சட்ட கொள்கையின் கீழ் விசாரணை தேவை என்று ஆளுநரிடம் தி.மு.க வலியுறுத்தியுள்ளது. இந்த கோரிக்கையை ஆளுநர் ரோசையாவை நேரில் சந்தித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியும் இருந்தார். இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பு திறந்துவிட்டு பெரும்சேதம் ஏற்பட்டதற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து ஜெயலலிதா பதவி விலக வேண்டும்; தமிழகத்தில் அ.தி.மு.க. அரசை கலைத்துவிட்டு உடனடியாக ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.


No comments:
Post a Comment