ஏர் இந்தியாவின் உள்நாட்டு விமானங்களில் இனி சைவ உணவு மட்டும் வழங்க ஏர் இந்தியா பொது மேலாளர் கேப்டன் டி எஸ் பைஸ் கூறியுள்ளார்.
ஏர் இந்தியா உள்நாட்டு விமானத்தில் இனி சைவ உணவு மட்டுமே வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
இது குறித்து ஏர் இந்தியா பொது மேலாளர் கேப்டன் டி.எஸ்.பைஸ் கூறியதாவது:
ஏர் இந்தியாவின் உள்நாட்டு விமானங்களில் 60 நிமிடம் முதல் 90 நிமிடம் வரை செல்லும் உள்ளூர் விமானங்களில் இனி சைவ உணவு மட்டுமே பரிமாறப்படவேண்டும். இந்த நடைமுறை வரும் ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்படும். மேலும் மதிய உணவு மற்றும் இரவு நேர உணவின் போது பயணிகளுக்கு காபி,டீ, வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபட்டுள்ளது.
No comments:
Post a Comment