ஹைதராபாத்: மாட்டுக்கறி திருவிழா என்ற பெயரிலான நிகழ்ச்சி நடத்த ஹைதராபாத்திலுள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பிரிவினர் முடிவு செய்துள்ளதற்கு இந்து மாணவர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது அங்கு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மாட்டிறைச்சி திருவிழா நடத்த அனுமதிக்க கூடாது என, இந்து ஜனஜாக்ருதி சமித்தி சார்பில், ஹைதராபாத் மாவட்ட கலெக்டர் கே.நிர்மலாவிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சந்திர மோகர் கூறுகையில், மாணவர்களுடன் சில சமூக விரோத சக்திகள் கைகோர்த்துக் கொண்டு, அமைதியை சீர்குலைக்க முயலுகின்றன. 2012ல் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு, மாணவர்கள் மத்தியில் பெரும் கலவரம் வெடித்தது, என்றார். இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI), பகுஜன் மாணவர் கூட்டமைப்பு, அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் டிசம்பர் 10ம் தேதி, மாட்டிறைச்சி விழா நடத்த அழைப்புவிடுத்துள்ளன. எழுத்தாளர் அருந்ததி ராய், கர்நாடக முதல்வர் சித்தராமையா, வி.சி.கே.தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோருக்கும் மாணவர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment