யார் முதல்வராக ஆதரிப்பீர்கள் என்ற கேள்விக்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமமாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு அளித்துள்ளனர் நமது தமிழ் ஒன் இந்தியா வாசகர்கள். நமது தமிழ் ஒன் இந்தியாவின் கருத்து கணிப்பு பகுதியில் "இவர்களில் யார் முதல்வராக நீங்கள் ஆதரிப்பீங்க?
கருணாநிதி ஜெயலலிதா விஜயகாந்த் ஸ்டாலின் வைகோ என நேற்று கேட்கப்பட்டது.
கருணாநிதிக்கு 7% இதில் இன்று சனிக்கிழமை பகல் 1 மணிவரை 5 முறை தமிழக முதல்வர் பதவி வகித்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு வெறும் 7% பேர் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஜெ- ஸ்டாலின் சம போட்டி ஆனால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 30% ஆதரவு தெரிவித்துள்ள வாசகர்கள் அதற்கு ஏறக்குறையாக சமமாக மு.க.ஸ்டாலினுக்கு 29% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சில நேரங்களில் இருவருக்குமே சமமாக 29% ஆதரவும் இருந்து வந்தது.
3வது இடத்தில் வைகோ அதேபோல் 3வது இடத்தை ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவுக்கு கொடுத்துள்ளனர் நமது வாசகர்கள். அவருக்கு 18% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சறுக்கும் விஜயகாந்த் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு 16% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். பொதுவாக அண்மைக்காலமாக ஊடகங்களில் நடத்தப்படும் கருத்து கணிப்புகளில் விஜயகாந்த் மீது நம்பகத்தன்மையற்ற நிலை இருப்பதை நமது வாசகர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவுக்கு ஆப்பு மேலும் மிஷன் 234 அதிமுகவின் கனவு நனவாகுமா என்ற கருத்து கணிப்பில் நிச்சயமாக இல்லை என 51% பேர் தெரிவித்துள்ளனர். மழை மண்ணை அள்ளிப்போடுவிட்டது என 20% பேரும் அடுத்த முறையும் அம்மாதான் வருவார் என 29% பேரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment