காஞ்சிபுரம் அருகே தேமுதிக பிரமுகர் பாபு, தலையில் கல்லைப் போட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் அருகே உள்ள நசரத்பேட்டையை சேர்ந்தவர் பாபு. 28 வயதுடைய இவர் சொந்தமாக ஷேர் ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார்.
தேமுதிக 41 ஆவது வார்டு இளைஞரணி செயலாளராகவும் இருந்தார். இந்நிலையில் இன்று காலை காஞ்சிபுரம், ரங்கசாமி குளம் அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையோரத்தில் பாபு கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
பெரிய கல்லை போட்டு அவரது தலை நசுக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் விஷ்ணுகாஞ்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தற்கு விரைந்து வந்த, காவல்துறையினர், பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து விசாரணை நடத்தினர். கொலை நடந்த இடத்தில் மதுபாட்டில்கள் கிடந்தன. எனவே நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் பாபு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
பாபுவின் மனைவி கவிதா கடந்த 8 மாதத்துக்கு முன்னர் கொலை செய்யப்ட்டார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
சுவிதா கொலை வழக்கில் பாபுவை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தேமுதிக பிரமுகர் பாவுவின் கொலை குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:
Post a Comment