பீகார் தேர்தலில் பசுக்கள் ஓட்டு போட அனுமதிக்கப்பட்டிருந்தால் நாம் வெற்றி பெற்றிருப்போம் என்று மோடியும், அமித் ஷாவும் புலம்புவதாக சமூக வலைத்தளங்களில் கேலி விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.பீகார் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அரசியல் ரீதியான கேலி கிண்டல்கள், நையாண்டிகள் குவிந்து வருகின்றன.
முகநூலில் வெளியிடப்பட்டுள்ள ஒரு சுவரொட்டி விளம்பரத்தில், மோடியும் அமித் ஷாவும் இணைத்து கட்டப்பட்டுள்ள ஒரு ராக்கெட்டுக்கு லல்லுவும் நிதிஷும் இணைந்து அந்த ராக்கெட்டின் திரிக்கு தீ வைப்பது போன்றும் அப்போது மோடியும் அமித் ஷாவும் இது பாகிஸ்தானில் செய்யப்பட்ட ராக்கெட்தான் என்பதில் சந்தேகமே இல்லை என்று புலம்புவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
மும்பையிலிருந்து வெளியிடப்பட்ட டுவிட்டரில், ”பீகார் வெற்றி பெற்றுள்ளது. நான் இந்தியாவை இன்னும் எனது நாடு என்று நம்பிக்கை கொள்ள ஒரு நினைவூட்டலாக அமைந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
மற்றொரு பதிவில், ”பசு வைக்கோலை தின்பதற்கு பதிலாக வைக்கோலானது பசுவை தின்று விட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொன்றில், ”எனக்கு பாகிஸ்தானை பற்றி தெரியாது. ஆனால் பீகார் தேர்தல் வெற்றிக்கு பின்னர் இந்தியாவில் பட்டாசு வெடிக்கப்படும்” என்றும் பதிவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment