அராஜகத்திற்கு எதிரான வெற்றிதான் பீகார் தேர்தல் முடிவு என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பீகார் தேர்தல் முடிவு குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவிக்கையில், மனித நேயத்திற்கும், அராஜகத்திற்கும் இடையிலான மோதல் இது. இதில் மனிநேயம் வென்றுள்ளது. அராஜகம் தோற்றுள்ளது.
வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற தத்துவத்திற்குக் கிடைத்த வேற்றுமை இது. துவேஷத்திற்கு எதிராக அன்புக்கு கிடைத்த வெற்றி இது. பீகார் மக்களுக்குக் கிடைத்த வெற்றி இது. பீகார் மக்களுக்கும், நிதீஷ் குமாருக்கும், லாலு பிரசாத் யாதவுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும், மாபெரும் கூட்டணிக்கும் எனது வாழ்த்துகள் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.
No comments:
Post a Comment