மேலத்தெவை சேர்ந்த மர்ஹூம் தொ.கா.மு முஹம்மது முகைதீன் ராவூத்தர் அவர்களின் மகளும்,மர்ஹூம் எம்.ஹெச் ஹாஜா முகைதீன் மரைக்காயர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி எம்ஏசி பக்கீர் முஹம்மது, மர்ஹூம் ஏஎம் முஹம்மது யூசுப், மர்ஹூம் எஸ்எம் சேக் அலி, மர்ஹூம் தொ.கா முஹம்மது முகைதீன் அப்துல் காதர் ஆகியோரின் மாமியாரும், எம்.ஹெச் ஜமால் உசேன், எம்.ஹெச் பஷீர் அஹமது, எம்.ஹெச் சம்சுதீன் ஆகியோரின் தாயாருமாகிய தண்ணிக்குமா என்கிற ஜெமீலா அம்மாள் அவர்கள் இன்று காலை 10 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். இவர் அதிரையில் 106 வயதுடைய மூதாட்டி ஆவார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
No comments:
Post a Comment