Latest News

சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை விழுந்தது: 54-வது முறையாக விபத்து

விமான நிலையத்தில் கண்ணாடி கதவுகள், கிரானைட் கற்கள், மேற்கூரை விழுவது தொடர் கதையாக இருக்கிறது. இதுவரை நடந்த 53 விபத்துகளில் ஊழியர்கள் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் 54-வது முறையாக விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் வருகைப் பகுதியில் கன்வேயர் பெல்ட்டுக்கு மேலே இருந்த மேற்கூரை (பால்ஸ் சீலிங்) நேற்று பகல் சுமார் 1.30 மணி அளவில் பெயர்ந்து கீழே விழுந்தது. அந்த நேரத்தில் அங்கு பயணிகள் யாரும் இல்லாததால், யாருக்கும் காயமில்லை.

சென்னையில் பெய்து வரும் கனமழையால் சென்னை விமான நிலைய ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. தண்ணீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் மோசமான வானிலை நிலவி வருகிறது.

இதனால் சென்னையில் இருந்து புறப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் தாமதமாக சென்றன. அதேபோல விமானங்கள் தரையிறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.