நவம்பர் 11 ஆம் தேதி அன்று சென்னையில் இறைச்சிக் கூடங்களை மூட சென்னை மாநகராட்சி உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நவம்பர் 11ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள அனைத்து இறைச்சிக்கடைகளும் மூடவேண்டும் என நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதே போன்று பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளையும் அன்றைய தினம்
விற்பனை செய்யக்கூடாது என்று சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
ஜைன மதம் உட்பட எந்த மதத்தினரின் உணர்வுகளும் புண்படுத்தப்படக் கூடாது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடாகும். ஆனால் ஒரு மதத்தினரின் விழாவிற்காக, மற்ற மத்தவரின் சுதந்திரத்தில் தலையிடுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. சென்னை மாநகராட்சியின் இந்த உத்தரவு உணவுச் சுதந்திரத்திற்கு எதிரானதாகும்.
மத்தியில் பாஜக அரசு அமைந்த பின்பு, நாடு முழுவதும் இறைச்சி உணவை முன்வைத்து சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதல்களை ஏற்றுக் கொள்ளமுடியாது. மேலும், தமிழகத்தின் தலைநகரத்தில் இந்த கட்டுப்பாடு மேலும் கவலை அளிக்ககூடியாதக உள்ளது. எனவே, சென்னை மாநகராட்சியின் இந்த உத்தரவு உடனே ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment