கிரீஸின் ரோட்ஸ் தீவு நோக்கிச் சென்ற அகதிகள் படகு நடுக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 22 பேர் கடல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக தினமும் ஆயிரக் கணக்கானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
அவ்வாறு அகதிகளாக வெளியேற நினைக்கும் பெரும்பாலானவர்கள் ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொள்கின்றனர். அவ்வாறு செல்லும் சில படகுகள் கடல் கொந்தளிப்பு காரணமாக கடலினுள் மூழ்கி விபத்துக்குள்ளாகின்றன. இது போன்ற விபத்துகளில் சிக்கி இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வரிசையில் துருக்கியில் இருந்து கிரீஸின் ரோட்ஸ் நோக்கி அகதிகள் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. காலிம்னோஸ் தீவுக்கு அருகில் வந்த போது அந்த படகு திடீரென நிலைதடுமாறி திடீரென்று கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில், 13 குழந்தைகள் உள்ளிட்ட 22 பேர் பலியாயினர். 144 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment