அதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [ WSC ] சார்பாக 15 ஆம் ஆண்டு மாநில அளவில் நடத்தும் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிகழ்ச்சி மேலத்தெரு மைதானத்தில் நேற்று சிறப்பாக தொடங்கியது.
இதையடுத்து பல்வேறு அணிகள் பங்குபெற்ற பகல் மற்றும் இரவு நேர ஆட்டங்கள் நடைபெற்றன. இன்று இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் அதிரை WSC அணியும், ஈரோடு கொங்கு அணியும் விளையாடியது. இரு அணிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர் என்பதை போல் விறுவிறுப்பாக ஆடினார். ஆட்ட இறுதியில் ஈரோடு கொங்கு அணி வெற்றி பெற்றது.
முன்னதாக தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், 'சமூக ஆர்வலர்' அப்துல் ஹலீம் கலந்துகொண்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து இறுதி ஆட்டத்தை துவக்கி வைத்தனர். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக முஹம்மது சுல்தான், மல்ஹர்தீன், ஜாஹிர் உசேன், மாஜுதீன், சகாபுதீன், ஜஹாங்கீர், ஜாஃபர் அலி, அன்வர், புரோஸ்கான், அப்துல் ஹலீம் ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் முதல் இடம் பிடித்த ஈரோடு கொங்கு அணிக்கும், இரண்டாம் இடம் பிடித்த அதிரை WSC அணிக்கும் ரொக்கத்தொகை, கேடயம் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இவற்றை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், 'சமூக ஆர்வலர்' அப்துல் ஹலீம், முஹம்மது சுல்தான், அப்துல் வாஹித், அப்துல் ஹலீம் ஆகியோர் வழங்கினர். மேலும் தொடர் போட்டிகளில் சாதனை நிகழ்த்திய வீரர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது. தொடரில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் மற்றும் மூன்றாம் பரிசுகளை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை அதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் சிறப்பாக செய்து இருந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான விளையாட்டு பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment