Latest News

தமிழக சட்டசபை செயலாளர் - சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியரோடு MMS குடும்பத்தினர் திடீர் சந்திப்பு !



தமிழக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் மற்றும் சமீபத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக புதிதாக நியமிக்கப்பட்ட டி.கே.ராஜேந்திரன் ஆகியோரை MMS குடும்பத்தினர் திடீரென சந்தித்து பேசினார்கள்.

இந்த சந்திப்பின் போது MMS தாஜுதீன், MMS சேக்நசுருதீன், MMS ரபி அஹமது, MMS பஷீர் அஹமது, MMS அப்துல் கரீம், MMS நிஜார் அஹமது, MMS ரவூப், MMS சகாபுதீன், MMS செய்யது முஹம்மது புஹாரி, MMS சம்சுதீன், MMS பனாஷர்கான், MMS ரியாஸ் அஹமது, MMS புரோஸ்கான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சந்திப்பு குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் MMS பஷீர் அஹமது நம்மிடம் கூறியதாவது:
'இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அரசு அலுவலகர்களோடும் - அரசியல் பிரமுகர்களோடும் நல்ல நட்புறவு பேணும் பழக்கத்தை மரியாதைக்குரிய காலஞ்சென்ற எங்கள் சாச்சா MMS அபுல் ஹசன் மரைக்காயர், காலஞ்சென்ற எங்கள் சாச்சா MMS அப்துல் வஹாப் ஆகியோர் எங்களுக்கு கற்றுத்தந்தது. இந்த பழக்கத்தை இன்றளவும் எங்கள் குடும்பத்தினர் பேணி வருகின்றனர்.

தமிழக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் அவர்கள் மரியாதைக்குரிய காலஞ்சென்ற எங்கள் சாச்சா MMS அபுல் ஹசன் மரைக்காயர், காலஞ்சென்ற எங்கள் சாச்சா MMS அப்துல் வஹாப் ஆகியோர் மீது மிகுந்த பாசம் கொண்டவர். சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக புதிதாக நியமிக்கப்பட்ட டி.கே.ராஜேந்திரன் அவர்கள் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர். அப்போதிலிருந்து எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பரிச்சையமானவர். சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக புதிதாக பொறுப்பு ஏற்றதற்கு நேரிடையாக சந்தித்து நாங்கள் வாழ்த்து கூறினோம். இவர்கள் இருவரையும் நாங்கள் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்' என்றார்.

 
 
 
 
நன்றி : அதிரைநியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.