மாட்டிறைச்சியின் நலன்கள் குறித்து செய்தி வெளியிட்டமைக்காக ஹரியானா அரசு இதழின் ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஹரியானா அரசுக்கு சொந்தமான "சிக் ஷா பார்தி" என்ற இதழில் மாட்டிறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ற தலைப்பில் கடந்த செப்டம்பர் மாதம் கட்டுரை ஒன்று வெளியானது.
அதனை அப்போது கண்டுகொள்ளாத மாநில அரசு, மாட்டிறைச்சி மீது எழுந்துள்ள சர்ச்சையை முன்வைத்து இப்பிரச்சனையை தற்போது கையில் எடுத்துள்ளது.
சர்ச்சைக்குரிய கட்டுரையை வெளியிட்டதற்காக இதழின் ஆசிரியரை அப்பதிவியில் இருந்து நீக்குவதாக அரசு அறிவித்துள்ளது.
ஹரியானாவில் பசுவதை தடுப்புச் சட்டம் அமலில் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment