நடிகர் விவேக்கின் மகன் பிரசன்ன குமார் மூளை காய்ச்சலால் நேற்று மரணம் அடைந்தார். அவருடைய உடல் தகனம் சென்னையில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
நகைச்சுவை நடிகர் விவேக் - அருள் செல்வி தம்பதியருக்கு அமிர்தா நந்தினி, தேஜஸ்வினி என்ற 2 மகள்களும், பிரசன்ன குமார் என்ற 13 வயது மகனும் இருந்தனர்.
சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த பிரசன்ன குமார், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ன காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், காய்ச்சல் குணமாகவில்லை. உடல் பரிசோதனையில் அவருக்கு மூளைக்காய்ச்சல் பரிதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, சிக்சைக்காக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில், சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 40 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று பிரசன்ன குமாரின் உடல்நிலை கவலைக்கிடமானது. அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடினர். ஆனால் சிகிக்சை பலன் இன்றி அவர் மரணமடைந்தார்.
பின்னர், பிரசன்ன குமாரின் உடல் மருத்துமனையில் இருந்து, விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள விவேக்கின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பிரசன்னகுமாரின் மரணம், அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல், திரையுலகினரையும் பெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைத்துறையினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர் பொன்வண்ணன், ஜெயம் ரவி, நடிகர்கள் விஜய், உதயநிதி ஸ்டாலின், சந்தானம் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்கள்.
மேலும், சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலர் பிரசன்னகுமார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், பிரசன்ன குமாரின் உடல் இன்று பிற்பகலில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, விருகம்பாக்கம் இளங்கோ நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment