கோவையில் நடந்த தேமுதிக மாநாட்டில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா பேசிய பேச்சு தொண்டர்களை வெகுவாகக் கவர்ந்தது. மனைவி பிரேமலதா பேசுவதை விஜயகாந்த்தும் ஆர்வமாக கவனித்து வந்தார்.
கோவையில் தேமுதிகவின் 11வது ஆண்டு விழா நடந்தது. அதில் கலந்து கொண்டனர் விஜயகாந்த்தும், பிரேமலதாவும். இந்த மாநாட்டில் பிரேமலதா பேசிய பேச்சிலிருந்து சில சுவாரஸ்ய துளிகள்...கிரானைட் குவாரி மோசடிகளை விசாரித்து வரும் சகாயம், நியாயத்தை நிலை நாட்ட அமாவாசை இரவில் மயானத்தில் படுத்து தூங்குகிறார். அந்த காட்சியை நான் டி.வி.யில் பார்த்தேன். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், சகாயம் எனக்கு கேப்டனை போல தெரிகிறார். நியாயத்தை நிலை நிறுத்த சகாயம் போராடி வரும் அதே மதுரை மண்ணில் பிறந்த விஜயகாந்த் தான் அவருக்கு உதாரணமாக இருக்கிறார். சகாயத்துக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். தேமுதிக ஆட்சிக்கு வந்தால் தவறான அதிகாரிகள் களையெடுக்கப்பட்டு, சகாயம் மாதிரியான நேர்மையான அதிகாரிகள் தான் இருப்பார்கள். விஜயகாந்த் நடித்த படங்கள் தான் போலீசாருக்கு பாடங்களாக உள்ளன. போலீஸ் அகடாமியில் விஜயகாந்த்தின் படங்கள் தான் போட்டு காட்டப்படுகிறது என்றார் பிரேமலதா. அங்கே என்ன தெரிகிறது?
No comments:
Post a Comment