தமிழக சட்டமன்றம் துதிபாடும் மன்றமாக உள்ளதாக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஜனநாயகத்தை அவைத் தலைவர் படுகுழியில் தள்ளுவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முந்தைய தி.மு.க ஆட்சி குறித்து அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தவறான கருத்தை தெரிவித்ததாக கூறினார். அமைச்சரின் கருத்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு தி.மு.க விடுத்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.
கருத்து குறித்து பேசவும் அனுமதி தராததால் தி.மு.க வெளிநடப்பு செய்ததாக தெரிவித்த ஸ்டாலின்,அவையிலிருந்து தி.மு.க.வினரை வெளியேற்றும் நோக்கத்துடனேயே அமைச்சர் பேசினார் என்றார். தி.மு.க.வினரை கோபப்படுத்தி, கலவரத்தை உண்டாக்க வேண்டும் என அமைச்சர் வெங்கடாசலம் முயற்சித்ததாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். தமிழக சட்டமன்றம் துதிபாடும் மன்றமாக உள்ளதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின், அவைத் தலைவர் ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளுவதாகவும் கடுமையாக சாடினார்.
No comments:
Post a Comment