கடைகளில் பொருள்களை வாங்கவும், மெட்ரோ ரயில் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து வசதிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் புதிய ஸ்மார்ட் அட்டையை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. 'தேசிய பொதுப் பயன்பாட்டு கையடக்க அட்டை (Smart National Common Mobility Card) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் அட்டையை பண அட்டையாக (டெபிட்) அல்லது கடன் அட்டையாகவும் (கிரெடிட்) பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே இதன் சிறப்பம்சம்.
புதிய ஸ்மாட் அட்டையை நாடெங்கிலும் அறிமுகம் செய்வதற்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஒப்புதல் அளித்தார். ஏற்கனவே இதுபோன்றதொரு திட்டம் இந்தியாவில் தோல்வி அடைந்ததை அடுத்து, உலகின் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் அட்டைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்ட பிறகே, குழு பரிந்துரைத்த ஸ்மார்ட் அட்டைக்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment