மலேசியாவில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூபாய் 24 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று திருச்சிக்கு மலிண்டோ விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகள் வான்நுண்ணறிவு சுங்கத்துறை மற்றும் இமிக்ரேஷன் அதிகாாிகள் சோதனை செய்தனர்.
அப்போது பயணி ஒருவர் மெட்டல் டிடெக்டர் கருவியை கடந்து சென்றபோது பீப் சத்தம் ஒலித்தது. அந்த பயணியிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த யாசர்அரபத் என்பது தெரியவந்தது. மேலும் அவர், எலக்ட்ரானிக் பொருட்களில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த தங்கத்தின் மதிப்பு ரூபாய் 24 லட்சம் என சுங்கத்துறை அதிகாாிகள் தெரிவித்துள்ளனர்.


No comments:
Post a Comment