தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவியாக விஜயதாரணி நியமிக்கப்பட்டுள்ளார். இதனை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். 2016 சட்டசபை தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் தயாராகி வருகின்றன. தமிழகம், ஒடிஷா, மணிப்பூர் உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியில் புதிய தலைவிகளை நியமித்துள்ளார்
தமிழக மகளிரணி மாநிலத் தலைவியாக உள்ள சாய்லட்சுமியின் பதவிக்காலம் முடிந்துவிட்டதால் புதிய தலைவியாக விஜயதாரணி நியமிக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான விஜயதாரணி, காங்கிரஸ் கட்சியில் மாநிலப் பொதுச்செயலாளர், பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் தேசிய பொறுப்பாளர் போன்ற பொறுப்புகளை வகித்தவர். கடந்த 2011ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயதாரணி. இப்போது மாநில மகளிரணி காங்கிரஸ் கட்சித்தலைவியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


No comments:
Post a Comment