நமது பாரம்பரிய உணவு முறைகள் அனைத்தும் உணவே மருந்து எனும் அடிநாதம் கொண்டவை. எடுத்துக் காட்டாக கடலை மிட்டாய் எடுத்துக் கொண்டால், வேர்க்கடலையின் சத்துக்கள் அதிகம் இருந்தாலும் அதில் பித்தம் அதிகம். எனவே வேர்கடலையுடன் வெல்லம் சேர்த்து கடலை மிட்டாய் செய்தார்கள். வேர்கடலையில் உள்ள பித்தத்தைப் போக்கக் கூடியது வெள்ளம். எந்த தின்பண்டத்தை விடவும் குழந்தைகளுக்கு மிகவும் சிறந்த தீனி கடலை மிட்டாய்தான். இப்படி பல அறிவியலை உட்சேர்த்தே நமது பாரம்பரிய உணவு கலாசாரம் வளர்ந்தது. இத்தகைய பாரம்பரிய உணவுப் பொருட்கள் அருகி வரும் நிலையில் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் எனும் இணையதளம் இத்தககைய தின்பண்டங்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து உண்ணும் வசதியைச் செய்து கொடுத்துள்ளது.
எந்த ஒரு பாரம்பரியத்துக்கும் இரு பிரிவு உண்டு. ஒன்று தொன்று தொட்டு பின்பற்றி வருவது மற்றொன்று பிறரின் வழக்கத்தில் இருந்து காலப் போக்கில் எடுத்துக் கொள்வது. இந்த இரு வகையான பாரம்பரிய தின்பண்டங்களும் நமது ஊரில் ஏராளம். கடலை மிட்டாய் போன்ற பாரம்பரிய பண்டங்களுடன் நாம் சுவீகரித்துக் கொண்ட திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன் போன்ற பண்டங்களையும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் தளத்தில் வாங்கலாம். முகலாயர்களிடம் இருந்து வந்தது திருநெல்வேலி அல்வா, போர்த்துகீசியர்கள் விட்டுச் சென்றது மக்ரூன். இப்படிப் பிறரிடம் இருந்து வந்தாலும் நமது ருசிகேற்ப அவற்றை மாற்றி, நமது பாரம்பரிய சமையல் அறிவுடன் செய்வதால் இத்தகைய பண்டங்களும் நாம் மெய்மறக்கும் ருசியைத் தருகின்றன.
எந்த ஊரில் எது சிறப்பு அதில் யார் கை தேர்ந்தவர்கள் என்பதை ஊர் சுற்றி ஆராய்ந்து, ஒரு சிறு வட்டத்தினுள் சிக்கி இருந்த நம்ம ஊர் பாரம்பரிய தின்பண்டங்களையும், பொருட்களையும் வெகு ஜன சந்தைக்கு சீரும் சிறப்புமாக கொண்டு வந்து சேர்த்திருக்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம். ஒரே ஒரு க்ளிக் நீங்கள் ருசித்த, ருசித்திராத அறுசுவை தூண்டும் தரமான நம்ம ஊர் பண்டங்கள் உங்கள் வீட்டு வாசலில். கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் போன்ற குழந்தைகளுக்கான சத்தான பொருட்கள், திருநெல்வேலி அல்வா, சாத்தூர் சேவு, பள்ளபட்டி பூந்தி, தூத்துக்குடி மக்ரூன், மணப்பாறை முறுக்கு, போன்ற நா சிலிர்க்கும் சுவையான பண்டங்கள் அனைத்தும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இல்.
No comments:
Post a Comment