மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் பிறந்த தினத்தை இந்திய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. நாட்டின் முதல் குடிமகனாக பதவி வகித்தாலும் மக்களோடு மக்களாக பழகி, மாணவர்களின் அன்பான இதயங்களில் இடம் பிடித்தவர் கலாம். மரணிக்கும் தருவாயிலும் கூட மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தார் கலாம். அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் தலைவர்கள் மட்டுமல்லாது பிரபலங்களும், இளைய சமூதாயத்தினர் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நிஜ பாரத ரத்னா குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி பதிவிட்டுள்ள செய்தியில் இவர் இந்தியாவின் தலைசிறந்த மகனை இழந்து தவிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மோடி அஞ்சலி தலைசிறந்த குடியரசுத்தலைவர், மிகச்சிறந்த விஞ்ஞானி, அனைவரையும் கவர்ந்த தலைவர் ஏ.பி.ஜெ அப்துல் கலாமிற்கு அஞ்சலி என்று பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.
நம்பிக்கை நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் நாடு ஊக்கமளித்துவந்த ஒரு மனதை இழந்துவிட்டது. கலாம் ஜனாதிபதி ஆனபோது, நம்பிக்கை என்ற வார்த்தைக்கு புதிய அர்த்தத்தை இந்தியர்களுக்கு கொடுத்தவர் என்று கூறியுள்ளார்.
இந்திய மாணவர் தினம் மாணவர்களுக்காகவே, செயல்புரிந்து,மாணவர்களுடன் இருக்கும் போதே இன்னுயிர் நீத்த கலாம்அய்யாவின் பி.தினத்தை"இந்திய மாணவர் தினம்"அறிவித்தால் என்ன? என்று பதிவிட்டுள்ளார் நடிகர் விவேக்.
பல கோடி இளைஞர்களின் நாயகன் ராக்கெட் மனிதர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பலகோடி இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாக திகழ்ந்தவர் என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
சரித்திரம் படைத்த கலாம் நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்... ஆனால் நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும் என்று சொன்னது போலவே இன்றைக்கு சரித்திரத்தில் இடம் பெற்ற சாதனை மனிதராக வாழ்ந்து மறைந்துள்ளார் கலாம்.
எளிய மனிதர் தேசத்தின் கடைசி ஊரில் ஒரு இந்திய குடிமகனாய் பிறந்து, இந்தியாவின் முதல் குடிமகனான ஒரு எளிய மனிதனின் அரிய பயணம் #அப்துல்கலாம்
No comments:
Post a Comment