மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடலுக்கு நாளை மறுநாள் இறுதிச் சடங்கு நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு அனுமதியளித்ததையடுத்து, அப்துல் கலாம் உடல் ராமேஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வருகின்றன.
மறைந்த அப்துல் கலாம் உடலை நல்லடக்கம் செய்ய ராமேஸ்வரத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தை அடுத்த பேய்க்கரும்பு கிராமத்தில் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள அப்துல் கலாம் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறுவதால், நாளை மறுநாள் வியாழக் கிழமை அன்று (30-07-2015) தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய தினம் அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment