ஆயுள் கைதிகளை மாநில அரசுகள் விடுதலை செய்ய 2014ஆம் ஆண்டு பிறப்பித்த தடையை நீக்கி இடைக்கால உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம் . மேலும் சி.பி.ஐ. விசாரிக்காத வழக்குகளின் ஆயுள் கைதிகளை மாநில அரசுகள் விடுதலை செய்யவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ராஜிவ் வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இந்த முடிவின் மீது கருத்து தெரிவிக்க வேண்டிய மத்திய அரசு உச்சநீதிமன்றத்துக்குப் போய் ரிட் மனுவைத் தாக்கல் செய்தது.
இதனால் 7 தமிழர் விடுதலைக்கும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. பின்னர் இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. இந்த பெஞ்ச் முன்பாக கடந்த 15-ந் தேதி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக அரசைப் பொறுத்தவரையில் ராஜிவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்த போதும் தமிழக அரசுதான் சி.பி.ஐ.க்கு மாற்றிக் கொடுத்தது; அதனால் சி.பி.ஐ.க்குதான் கைதிகளை விடுவிப்பது குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் உள்ளது என கூறுவது தவறு என்று வாதிட்டு வருகிறது. மேலும் அரசியல் சாசனத்தில் அளித்துள்ள உரிமைகளின் படி மாநில அரசுகளுக்கு ஆயுள் கைதிகளை விடுவிக்க உரிமை என்றும் வாதிட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசோ, ராஜிவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது; இவர்கள் கொடும் குற்றம் புரிந்தவர்கள்; ஆகையால் விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே என்று வாதிட்டு வருகிறது.
No comments:
Post a Comment