டெல்லியில் கடந்த 7 வருடங்களில் 30 குழந்தைகளை கொன்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கொடிய மிருகம் ஒருவன் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. டெல்லியில் வடமேற்கு பகுதியில் 6 வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் ரவீந்திரகுமார் என்றவன் போலீசாரால் கைது செய்யப்பட்டான். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவன் இதேபோன்று குறைந்தபட்சம் மேலும் 15 சிறுவர், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான். அதில் அவன் சிறுவர், சிறுமிகளுக்கு சாக்லேட், பணம் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி ஒதுக்குப்புறமாக கூட்டிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்றதாக கூறி உள்ளான்.
அப்படி கொலை செய்த சிறுவர், சிறுமிகளின் உடல்களை வயல்வெளிகளில் வீசியும், பாதாளசாக்கடையில் போட்டும், புதைத்தும் வந்ததாக அவன் தெரிவித்துள்ளான். இந்த கொடூர குற்றங்களை அவன் 2009 ஆம் ஆண்டில் இருந்து செய்து வந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவன், "நான் பாலியல் பலாத்காரம் செய்யும் போது, அவர்கள் அழக்கூடாது மற்றும் சத்தம் போடக்கூடாது என்பதற்காக அவர்களை கொலை செய்துவிடுவேன். நான் தப்பிப்பதற்காக அவர்களை கொலை செய்துவிடுவேன்" என்று கூறிஉள்ளான். 17 வயதில் இருந்து கொடூரன் இக்கொடூரத்தை நடத்தி வந்து உள்ளான் என்பதும் தெரியவந்து உள்ளது. மேலும், "நான் குடிபோதையில் இருக்கும்போது என்னுடைய கட்டுப்பாட்டை இழந்துவிடுவேன். நான் தவறு செய்கிறேன் என்று எனக்கு தெரியும். ஆனால் என்னை என்னால் கட்டுப்படுத்த முடியாது. பின்னரே நான் செய்தது தவறு என்று வருத்தம் அடைவேன்" என்று கூறிஉள்ளான். ஒரு இடத்தில் சுமார் 2- 3 மாதங்களே தங்கிருப்பதாகவும், அப்பகுதியில் உறவினர்கள் வீட்டிற்கு வரும் குழந்தைகளை குறிவைப்பதாகவும் தெரிவித்து உள்ளான். அவன் வெளியிட்டு உள்ள கொடூரச் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் போலீசாரின் இரும்பு நெஞ்சத்தினையே உருக்குவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment