ஆன்ராய்ட் மொபைல் போனில் தமிழில் எழுதுவது எப்படி?(how to write tamil in android phones) இதுலாம் ஒரு மேட்டரா என்று மிக அறிந்தவர்கள் யாரவது இருந்தால் அப்படியே அப்பீட் ஆகிகங்க இது உங்களுக்கான பதிவல்ல. மாறாக புதிதாக போன் வாங்கி எழுதத் தெரியாமல் முழிக்கும் புதியவர்களுக்காக இப்பதிவு. (அப்பா வெளக்கியாச்சு )
இது கூட தெரியாமல் இருப்பார்களா என்று கேட்காதீர்கள் தினமும் எனது முகநூல் இன்பாக்ஸில் ஒருவராவது வந்து எப்படி தமிழில் எழுதுவது என கேள்வி தொடுக்காமல் இருந்ததில்லை. இனிமே இப்படி கேட்டால் இந்த பதிவின் லிங்கை கொடுத்து விடுவேன். அதனால் மிகவும் எளிமையாக சொல்லிக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். சரி பதிவுக்குள் போவோம்.
எல்லாத்தும் முதலில் உங்கள் போனில் இணைய (நெட்) வசதி இருக்க வேண்டும் அபப்டியிருந்தால் முதலில் Play Store போங்க மேலே உள்ள படத்தில் உள்ளது போல்.
அப்புறம் அந்த பூதக் கண்ணாடியை அழுத்தி Selinam என்று எழுதி தேடுங்கள்.
பல தமிழ் கீ போர்டுகள் இருந்தாலும் செல்லினம் நன்றாக இருப்பதால் அதனை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.
இப்படி பதிவிறக்கிய பிறகு நேரே போன் செட்டிங் போங்க போயி
Language & input போயி வட்டமிட்டு இருக்கு பாருங்க அங்கு அழுத்துங்கள்.
அப்புறம் இங்கு வட்டமிட்டு உள்ளது ரைட் கொடுத்து விடுங்கள்.
அதற்கு பிறகு Default என்கிற இடத்துக்கு போயி
இப்படி புள்ளி வைத்து விடுங்கள் அவ்வளவுதான் முடிந்தது இனி தமிழில் எழுதலாம் எழுதி கலக்கலாம்.
அப்புறம் இந்த செல்லின தமிழ் மூன்று வகையான கீ போர்டு இருக்கிறது அதில் ஒன்று ஆங்கிலம்.
வட்டமிட்டு இருக்கும் இடத்தில் தமிழ் என்று எழுதியிருந்தால் அது தங்கிலீஷில் ammaa என்று அடித்தால் அம்மா என்று வருகிற தமிழ் தங்கிலீஷ் வழி கீ போர்டு.
இது நேரடி தமிழ் கீ போர்டு நேரடியாகவும் தமிழில் அடிக்கலாம்.
நமது தாய்மொழியான தமிழில் எழுதுவோம் ஏனெனில் நமது தாய்மொழில் எழுதும்போதுதான் உணர்வுபூர்வமான உரையாட முடியும்.
அன்புடன் உங்கள் சகோதரன் வலையுகம் ஹைதர் அலி.
நன்றி : வலையுகம் ஹைதர் அலி.
No comments:
Post a Comment